U19 உலகக் கோப்பையை ஆறாவது முறையாக இந்தியா அணி வென்று அபார சாதனை

இங்கிலாந்து இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

யு19 உலகக் கோப்பை தொடரை 6ஆவது முறையாக வென்று இந்தியா அசத்தியுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
அபாரமாக விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 411 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடங்கும்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் மிண்டோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். செபஸ்டியன் மோர்கன் மற்றும் அலெக்ஸ் கிரீன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், லம்ஸ்டன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது.
ஆனால் இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக காலேப் மேத்யூ ஃபல்கனர் அதிரடியாக விளையாடி 67 பந்துகளில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அம்ப்ரீஷ் 3, கனிஷ்க் சௌஹான் 2, தீபேஷ் தேவேந்திரன் 2 விக்கெட்டுகள் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *