பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டர் ரூ.300-ஐ தாண்டிய விற்பனை செய்யப்படும் நிலையில், விலையை கட்டுப்படுத்தக்கோரி பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டுள்ளது. அதற்கு மாநியங்களை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிபத்தனைகளை வித்தித்துள்ளது சர்வதேச நாணய நிதியம்.
இந்நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசலுக்கு வழங்கப்படும் மாநியம் குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.305.36க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.311.84க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையுல் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொறுமையை இழந்த பாகிஸ்தான் மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். பாகிஸ்தான் தலைநகரான கராட்சி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.