இங்கிலாந்தை சேர்ந்த அலன்(28) மற்றும் லியோ(28), இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில்லில் தங்கியுள்ளனர். அலன் ஆரோவில்லில் விவசாயம் செய்து வருகிறார். லியோ ஆரோவில்லில் உள்ள மாற்றுத்திறனாளி பள்ளியில் பணியாற்றி வருகிறார். இங்கிலாந்தில் இருக்கும்போதே இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இங்கு வந்த பின்பும் அவர்களின் காதல் தொடர்ந்தது.
இந்நிலையில் இருவரும் இந்து கலாச்சாரப்படி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி லியோ பணியாற்றி வரும் பள்ளி வளாகத்தில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்தில் மணமகன் வேட்டி சட்டை மற்றும் துண்டுடன் வந்தார். மணமகள் லியோ திருமண கூரைசேலை அணிந்து வந்தார். இருவரும் இந்துமுறைப்படி தாலி கட்டி, மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர். அலன் – லியோ ஜோடியை ஆரோவில்வாசிகள் அனைவரும் வாழ்த்தினர்.