கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி; பொது விடுமுறை அளித்த இந்திய மாநிலங்கள்

இந்தியா உலகம் சுற்றுலா செய்திகள் தென் அமெரிக்கா நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து இருதிப்போட்டியை முன்னிட்டு கேரளா, மேகாலயா, மணிப்பூரில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் இன்று இரவு 12 : 30 (இந்திய நேரப்படி) மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா-முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் ஆகிய அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டமானது அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில்லேயே கால்பந்து ரசிகர்களை அதிகம் கொண்ட கேரள மாநிலத்தில் பிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு கேரளத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மேகாலயாவிலும் உலக கோப்பை இறுதிபோட்டியை முன்னிட்டு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா வீடியோ மூலம்,அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில் மணிப்பூர் மாணிலத்திலும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்று மாநிலஙகள் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை முன்னிட்டு விடுமுறை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *