விடுதலை போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் இன்று

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

விடுதலை போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 86வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. விடுதலை போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ. சிதம்பரனாரின் 86வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை துறைமுகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ. சிதம்பரனாரின் படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன், சட்டப்பேரவை அமைச்சர் ரகுபதி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை துறைமுகம் பொறுப்பு கழகத்தின் சார்பில், துறைமுக பொறுப்பு கழக இயக்குனர் சுனில் மற்றும் சென்னை துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகள் வ.உ.சி.யின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நாட்­டின் விடுதலைக்காகத் தன்­னையே அர்ப்­ப­ணித்­துக் கொண்­ட­தோடு மட்­டு­மின்றி, தனது சொத்து சுகங்­க­ளை­யும் சொந்த பந்­தங்­க­ளை­யும் இழந்து அந்­நி­ய­ரால் இரட்டை ஆயுள் தண்­ட­னை­யை­யும் அனு­ப­வித்து, சிறை­யிலே செக்­கி­ழுத்த தியா­கச் செம்­ம­ல் வ.உ. சிதம்பரனார் என்பது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *