ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வரவிருப்பதாக செய்தி.

அகழ்வாராய்ச்சி அரசியல் ஆரோக்கியம் இந்தியா உலகம் கண்டுபிடிப்பு சமையல் சிறப்பு செய்திகள் மருத்துவம் முதன்மை செய்தி ரஷ்யா

ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் விரைவில் இந்தியா வரவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்தார். ரஷ்யா செய்தி நிறுவனத்துடன் உரையாடிய போது, இந்திய அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, ரஷ்யா அதிபர் விரைவில் இந்தியாவுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதற்கான முன்னேற்பாடுகள் இந்தியாவில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன எனவும் அவர் கூறினார்.கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, சமீபத்தில் ரஷ்யாவிற்கு சென்றார். இந்தியா மற்றும் ரஷ்யா உடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுவாக உள்ளன. அதிபர் புதின், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணம், இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புதினின் பயணத்திற்கான திட்டம், விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *