ஏறுமுகமாய் இருந்த தங்கம் வெள்ளியின் விலை திடீர் சரிவு; மக்களுக்கு சற்றே ஆறுதல்

அமெரிக்கா அரபு நாடுகள் இந்திய வணிகம் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பெண்கள் பொருளாதாரம் போர் மற்றவை முதன்மை செய்தி

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,000-க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *