அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், யூடியூபில் 3 கோடி (30 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது.
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் நேற்று (பிப்.28) வெளியானது. பல கெட்டப்புகளில் அஜித்தின் ‘மாஸ்’ டீசர் கவனம் ஈர்த்தது. இந்த டீசரில் தீனா, பில்லா தோற்றங்களில் அஜித் காட்சியளித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
டீசர் வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், யூடியூபில் 3 கோடி (30 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. அதேசமயம் ‘விடாமுயற்சி’ டீசர் மொத்தமாக 14 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ‘விடாமுயற்சி’ சாதனையை ‘குட் பேட் அக்லி’ முறியடித்துள்ளது.
