எதிர்கட்சிகளின் I.n.d.i.a கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் அடுத்த மாதம் போபால் நகரில் நடபெறும் என அறிவிப்பு; தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

I.N.D.I.A கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மத்திய பிரதேச மாநில போபால் நகரில் அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்கொள்ள 28 கட்சிகள் ஒரே அணியாக இணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட இந்த கூட்டணிக்கு I.N.D.I.A என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இதன் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் (இன்று செப் 13) நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் 12 பேர் கலந்து கொண்டனர்.
இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடத்துவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். ஊழல் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற விவகாரங்களை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொளவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.