இந்திய கடற்படை வீரர்கள் நிகழ்த்தும் லடாக் வரை சாகச பயணம்; இம்முயற்சியில் டிவிஎஸ் நிறுவனமும் இணைந்தது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

இந்தியாவின் பிரபலமான இருசக்கர மோட்டார் வாகனமான டிவிஎஸ் (TVS) நிறுவனத்துடன் இந்திய கப்பற்படை கைகோர்த்துள்ளது. இருவரும் எதற்காக, எந்த நோக்கத்திற்க்க இணைந்துள்ளார்கள் என்ற விவரத்தை அறிய ஆவலாக உள்ளீர்களா? வேறு ஒன்றுமில்லை; பனி சூழ்ந்த இமயமலைப் பகுதியான லடாக்கில், மலைகளின் நடுவே மோட்டார் சைக்கிளில் ஒரு சாதனைப் பயணத்தை நமது கப்பற்படை வீரர்கள் நிகழ்த்த உள்ளனர். அதற்காக தான் டிவிஎஸ் நிறுவனத்தோடு கை கோர்த்துள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 அண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாகவும், ஆஸாத் கி அம்ரித் மகோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்த 28 நாள் பயணம் இருக்கப் போகிறது. இந்த சாகசப் பயணத்தில் நமது வீரர்கள் டிவிஎஸ் நிறுவனத்தின் அபாச்சீ (Apache) பைக்கை பயன்படுத்த உள்ளனர். அனைவரின் ஆர்வத்தையும் தூண்டும் இந்தப் பயணம் டெல்லியிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட உள்ளது.
துணை அட்மிரல் எஸ்.ஜே. சிங், கப்பற்படை அலுவலர்களின் துணை தலைவர் மற்றும் டிவிஎஸ் நிறுவனத்தின் பிசினஸ் பிரிவு தலைவர் விமல் சும்ப்ளி ஆகியோர் இந்தப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். இந்த சாகசப் பயணத்திற்கு கப்பற்படையின் புகழ்பெற்ற மோட்டார் பைக் டீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயண குழுவிற்கு “Sea Riders” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவர்களது பயணம் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்தில் இருந்து தொடங்குகிறது.
அர்ப்பணிப்புமிக்க 34 கப்பற்படை அதிகாரிகள், சக்திவாய்ந்த TVS Apache RTR 200 4V மற்றும் TVS Apache RTR 310 வாகனத்தில் கண்ணைக் கவரும் மலைப்பகுதிகளில் ஒரு மாத காலம் பயணம் செய்ய உள்ளனர். இந்தப் பயணத்தில் சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், கார்கில், நுப்ரா அகிய பகுதிகள் வழியாக சென்று இறுதியில் லேயில் பயணத்தை நிறைவு செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 5,600 கிமீ பயணம் செய்து ஜூலை 12ம் தேதி இந்த பயணம் நிறைவடைகிறது.
டிவிஎஸ் அபாச்சீ (TVS Apache) பைக் குறித்து சொல்ல வேண்டியதேயில்லை. இது இளைஞர்களின் பிடித்தமான பைக்குகளில் ஒன்று. 150 – 200 சிசி பைக்குகளில் TVS Apache மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. 50 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த பைக் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
லடாக்கின் அழகான நிலப்பகுதிகளையும் வடக்கு எல்லைப்புற பகுதிகளையும் முழுமையாக பயணம் செய்வதற்கு வசதியாக, இந்தப் பயணம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பயணத்தின் ஒரு பகுதியாக லடாக்கில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களுக்கு இந்திய கப்பற்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட அக்னீபத் திட்டம் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். இதற்காக மாணவர்களிடம் அதிகாரிகள் கலந்துரையாடலை நடத்தவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *