அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். அங்கு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தற்போது விமானம் மூலம் வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபை தலைமையகத்தில் உலக யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா செய்தார். பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், யோகா ஆசிரியர்கள் உள்பட சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்று யோகா செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சி, ‘அதிக நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி’ கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு வாஷிங்டனில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களின் சார்பில் கலாச்சார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
