அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்ததாக இந்திய வம்சாவளி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

அரசியல் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க அதிபர் மாளிகை முன்பு லாரியை கொண்டுவந்து மோதிய இந்திய வம்சாவளி இளைஞரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகை உள்ளது. இங்கு தான் அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுடன் வசிக்கிறார். இங்கு நேற்று முன்தினம் இரவு பரபரப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை இரவு நேரத்தில் ஒரு லாரி ஒன்று வெள்ளை மாளிகையை நோக்கி படு வேகமாக வந்தது. பிரேக் ஏதும் போடாமல் வாயில் அருகே இருந்த பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் சாலை மற்றும் நடைபாதைகளை மூடி, லாரியை ஓட்டி வந்த நபரை பிடித்து கைது செய்தனர்.
அப்போது தான் லாரியை ஓட்டியது 19 வயது இளைஞர் என்றும், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் சாய் வர்ஷித் கந்துலா. இவர் மிசோரி மாகாணத்தின் செஸ்டெர்பீல்டு பகுதியைச் சேர்ந்தவர். அங்கிருந்து விமானம் மூலம் கிளம்பி வந்து லாரியை வாடைக்கு எடுத்து இந்த பகீர் செயலை செய்துள்ளார். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அவரை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சிக்குரிய வாக்குமூலம் தந்துள்ளார். தான் அதிகாரத்தை பிடிக்கவே நாட்டின் தலைவராகவே அவ்வாறு வெள்ளை மாளிகை நோக்கி வந்தேன். அதற்கு குறுக்கே அதிபர் ஜோ பைடன் உட்பட யார் வந்தாலும் அவர்களை கொலை செய்வேன் என்றுள்ளார்.
மேலும், அந்த இளைஞர் நாஜி முத்திரை, கொடிகளை தன்னிடம் வைத்துள்ளார். நாஜி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், ஹிட்லர் ஒரு வலிமையான தலைவர் என்பதால் அவரை பிடிக்கும் என்றுள்ளார். அந்த இளைஞரை கைது செய்த காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *