300வது ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார் இந்தியாவின் விராட் கோலி.

இந்தியா சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி விளையாட்டு

துபாயில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றுவருகிறது. நாளை நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இந்திய அணியின் வீரர் விராத் கோலி, தனது 300வது ஒருநாள் போட்டியை விளையாட உள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும். பாகிஸ்தானுக்கு எதிராக 100 ரன்கள் அடித்த கோலி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 3000 ரன்களை கடக்க இன்னும் 85 ரன்கள் தேவைப்படும், இதனை எட்டும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3000 ரன்களை கடந்த சாதனையை பெற்ற 5வது வீரராக மாறலாம். இதுவரை விராட் கோலி 55 போட்டிகளில் 2915 ரன்களை (9 சதங்கள்) குவித்துள்ளார். இதில் 14 டெஸ்ட் போட்டிகளில் 959 ரன்கள், 31 ஒருநாள் போட்டிகளில் 1645 ரன்கள் மற்றும் 10 ‘டி-20’ போட்டிகளில் 311 ரன்கள் அடித்துள்ளார். இதற்கிடையில், இந்தியாவின் சச்சின் (3345 ரன், 66 போட்டிகள்), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (3145 ரன், 69 போட்டிகள்), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (3071 ரன், 67 போட்டிகள்) மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் (3068 ரன், 50 போட்டிகள்) ஆகியோர் இந்த மைல்கல்லை அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *