சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யாL1 விண்கலம் வெள்ளிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது; இஸ்ரோ மற்றுமொரு சாதனை

அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் இன்று (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை செலுத்தும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) இறங்கியது. விண்கலத்தை ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.10 மணிக்குத் தொடங்கியது.
இதையடுத்து, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து இருந்து இன்று(சனிக்கிழமை) காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டா் உள்ளிட்ட ஏழு விதமான ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன.
பூமியில் இருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈா்ப்பு விசை சமமாக இருக்கும். சுமாா் 1,475 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலம் அந்த இடத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கு இருந்தபடி சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தபுலம் உள்ளிட்டவற்றை அறிவதற்கான ஆய்வுகளை ஆதித்யா விண்கலம் மேற்கொள்ளும். இந்தத் திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சோ்ந்த பெண் விஞ்ஞானி நிகா் ஷாஜி பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது. இவா் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சோ்ந்தவர்.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சூரியனை ஆய்வு செய்யும் முயற்சிக்காக இதுவரை அமெரிக்கா, ஜொ்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. ஆதித்யா எல்-1 திட்டமிட்ட இலக்கை எட்டும்பட்சத்தில் அந்த வரிசையில் இந்தியாவுக்கு தனி இடம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *