துபாயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம்; தமிழ்நாட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்

அரபு நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

துபாயில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் மினி ஏலத்தில் 2 தமிழ்நாட்டு வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
துபாயில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலம் விருவிருப்பாக நடைபெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றனர்.
மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்திருந்தனர். அதில், 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் ஆவர். இதில் இதுவரை 2 தமிழ்நாட்டு வீரர்கள் ஏலத்தில் தேர்வாகியுள்ளனர். ஷாருக்கானை ரூ.7.4 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும், மணி மாறன் சித்தார்த்தை ரூ.2.4 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *