அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பிடம் தோல்வியடைந்தார். தேர்தல் பின் முதல்முறையாக , வாஷிங்டனில் இருந்து கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அவர், அங்கு ஏற்பட்ட காட்டுத்தீக்கு எதிரான தீயணைப்புப் படையினரின் முயற்சிகளை பாராட்டி, அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். கலிபோர்னியாவில் கவர்னர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் எண்ணம் கமலா ஹரிஸ்க்கு உள்ள நிலையில், அந்த தேர்தலில் கலந்து கொள்ள விரும்பும் கட்சியின் மற்ற தலைவர்கள் பின்வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கமலா ஹாரிஸ், “நான் இங்கே இருக்கிறேன், எந்தப் பதவியில் இருந்தாலும் இங்கேயே இருப்பேன். இதுவே சரியான செயல்” என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் துணை அதிபராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர் கமலா ஹாரிஸ் இதனை, சக ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவுடன் நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலத்தை வழி நடத்துவதற்கான வலுவான வாய்ப்பான மாகாண கவர்னர் போட்டியில் வெற்றி பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிபர், துணை அதிபர், செனட்டர் மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆகிய பதவிகளுக்காக இதுவரை கலிபோர்னியாவில் போட்டியிட்டு ஹாரிஸ் வெற்றியடைந்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
