திருச்செந்தூர் முருகன் கோயிலில் தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா; வரும் 18ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கலை / கலாச்சாரம் கோயில்கள் செய்திகள் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் தீபாவளியைப் பொருட்படுத்தாமல் கந்தசஷ்டி திருவிழாவிற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தங்களின் உடைமைகள், பனை ஓலைப்பாய்களுடன் விரதம் இருக்க குவிந்து வருகின்றனர்.
தொடர்ந்து நாளை அதிகாலை முதல் கடலில் புனித நீராடீய பக்தர்கள் 6 நாட்கள் கோவிலில் தங்கி விரதம் மேற்கொள்வார்கள்.
பக்தர்களின் வசதிக்காகக் கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தைச் சுற்றியும்
பல்வேறு பகுதிகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கும் வகையில் 26 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்குத் தேவையான
குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் கோவில் நிர்வாகம்
மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *