இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் போராட்டக்காரர்களை நோக்கி போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்புவிலிருந்து 95 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரம்புக்கனா நெடுஞ்சாலையில் இன்று போராட்டக்காரர்கள் திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அரசைக் கண்டிக்கும் வகையில், வாகன ஓட்டிகள் டயர்களை எரித்தும், தலைநகருக்குகான முக்கிய சாலையை மறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது இலங்கை காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். காவலர்கள் மீது மக்கள் கற்களை வீசியதால் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்த நேரிட்டதாக இலங்கை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.