2023ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில், 20.38 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தற்போது நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இதில் 11,45,976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 53.3. தமிழ்நாட்டைச் சேர்ந்த 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் தேர்வு எழுதினர். இதில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
அதேபோல், நீட் நுழைவுத்தேர்வில் முதல் 10 இடத்தில் 4 தமிழ்நாடு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். கௌஸ்தவ் பௌரி – ரேங்க் 3 (மதிப்பெண் 716) சூர்யா சித்தார்த் – ரேங்க் 6 (மதிப்பெண் 715) வருண் எஸ் – ரேங்க் 9 (மதிப்பெண் 715). தமிழ்நாட்டு மாணவர்கள் நமது மாநிலத்தை பெருமைப்படுத்தியுள்ளனர் என ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் இருந்து அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.