WHO வழிகாட்டுதல்களின்படி இந்த வைரஸ் பரவலை தடுக்க பண்ணைகள், சந்தைகள் மற்றும் தொழுவத்தில் ஒட்டகங்கள் மற்றும் பிற விலங்குகள் இருக்கும் கொட்டகைகளுக்குச் செல்லும் போது, பொது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருவர் பின்பற்ற வேண்டும். விலங்குகளை தொடும் முன்னும் பின்னும் கைகளை சுத்தம் செய்வதுநோய்வாய்ப்பட்ட விலங்குகளுடன் பழகுவது அல்லது தொடுவதை தவிர்ப்பதும் அடங்கும். நோய்க்கிருமிகளால் ஏற்படும் அபாயத்தை குறைக்க, பால் மற்றும் இறைச்சி போன்றவற்றை பச்சையாகவோ அல்லது சமைக்காமலோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.