நரேந்திர மோடியின் அற்புதமான ஆளுமை உலகின் கவனத்தை ஈர்க்கிறது டொனால்ட் ட்ரம்ப் புகழாரம்

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு நிகழ்வுகள் வட அமெரிக்கா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது’’ என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது, இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன, இதில் அதிக எலக்ட்ரோரல் வாக்குகள் பெற்ற ட்ரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார், எதிராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் குறைந்த வாக்குகளை பெற்றும் தோல்வியடைந்தார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு, டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்றுள்ளார். இதற்கிடையில், 6-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி.தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வெற்றியடைந்த டொனால்ட் ட்ரம்ப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அந்த உரையாடலில், தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் விண்வெளி போன்ற துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என இரு தலைவர்களும் உறுதி கூறினர். மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியது, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையிலான தொலைபேசி உரையாடலுக்கான தகவல்களாக, ‘‘இந்திய மக்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்களின் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர் எனவும். தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப்பை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.அதில் இரு நாடுகளின் நலன்கள், உலக அமைதி மற்றும் செழுமைக்காக இணைந்து செயல்பட மோடியும், ட்ரம்ப்பும் உறுதி செய்துள்ளனர்’’. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது’’ என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *