சிவகார்த்திகேயன் SK21 படத்தலைப்பு மற்றும் டீசர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘அயலான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அவரது 21-வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK21 திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்திற்காக உடற்பயிற்சி மேற்கொண்டு தீவிரமாக சிவகார்த்திகேயன் தயாராகி வந்த நிலையில், 6 பேக் வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் படத்தின் பெயர் மற்றும் டீஸரை படக்குழு மற்றும் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
பிறந்தநாள் காணும் அன்புத் தம்பி சிவகார்த்திகேயன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். அமரன் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீஸரை வெளியிடுவதில் மகிழ்கிறேன்” என சிவகார்த்திகேயனுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து SK21 திரைப்படத்தின் பெயர் மற்றும் டீஸரை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.