அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1977ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பழமையான மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில் உள்ளது. பிளஷிங்கில் அமைந்துள்ள இந்த கோவில் இருக்கும் தெருவுக்கு அமெரிக்காவின் அடிமைத்தன எதிர்ப்பு மற்றும் மத சுதந்திரத்திற்காக போராடிய ஜேன் போவின் நினைவாக போவின் தெரு என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அதன் பெயரை மாற்றி அதற்கு அடையாளமாக விளங்கி வந்த விநாயகர் கோவில் பெயரையே சூட்டி “விநாயகர் கோவில் தெரு” என சூட்டியுள்ளனர். கடந்த 2ஆம் தேதி நடந்த இந்த பெயர் சூட்டு விழாவில் இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.