2024 வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது; கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக மற்றும் புரத கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக இவ்விருது அறிவிப்பு

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சிறப்பு செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நடப்பாண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக டேவிட் பேக்கருக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும், புரத கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய இருவருக்கும் ஒரு பாதியும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *