ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்ற மோடி; சீன, ரஷ்ய அதிபர்களை சந்திக்க வாய்ப்பு

அரசியல் இந்திய வணிகம் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சீனா செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா ஜப்பான்

ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள தியான்ஜின் சென்றார். ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் ஆசிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, அமெரிக்கா வரிவிதிப்பால் உருவாகி உள்ள பொருளாதார சுணக்கம், ஸ்திரத்தன்மையற்ற சூழல் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை தனியாக சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆபரேஷன் சிந்து, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படலாம் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *