பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை (21.11.2025) தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கு பயணம் செல்கிறார். அவர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அங்கு அரசு சுற்றுப்பயணம் மேற்கொள்வார். ஜி-20 மாநாட்டின் மூன்று முக்கிய அமர்வுகளிலும் பிரதமர் மோடி பேச உள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை தென் ஆப்பிரிக்கா ஏற்றுக்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, ஜோஹன்னஸ்பர்க் நகரில் இந்த ஆண்டு நவம்பர் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் 20வது ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஜி-20 மாநாடு முதல் முறையாக ஆப்பிரிக்க கண்டத்தில் நடப்பது சிறப்பு அம்சமாகும்.

