கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்று பிரக்ஞானந்தா சாம்பியன்.

ஆளுமை/விருது இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் விளையாட்டு

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்ற நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கருவானாவை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியின் தொடக்கத்தில் கிளாசிக்கல் பிரிவில் பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. முதல் ஆட்டத்தில் அவர் தோல்வியடைந்த நிலையில், அடுத்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் கிளாசிக்கல் சுற்றின் முடிவில் 3-9 என்ற புள்ளிகள் கணக்கில் கருவானாவிடம் பிரக்ஞானந்தா பின்தங்கினார். இதையடுத்து நடைபெற்ற ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் ஆட்டங்கள் பிரக்ஞானந்தாவுக்கு முக்கியமானதாக அமைந்தன. ரேப்பிட் பிரிவில் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் பிரக்ஞானந்தா அபாரமாக வெற்றி பெற்றார். இதன் மூலம் போட்டியில் மீண்டும் முன்னிலை பெறும் வாய்ப்பை உருவாக்கினார். தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் பிரிவின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறும் வாய்ப்பை அவர் தவறவிட்டாலும், இறுதியில் 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் கருவானாவை வீழ்த்தி கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் செஸ் டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *