நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, யானை காப்பாளர்கள் பொம்மன், பெள்ளியை சந்தித்து கவுரவப்படுத்தினார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னையில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடி கவுரப்படுத்தினார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பொம்மன்-பெள்ளி தம்பதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்பின் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார்.
அங்கு அவர் ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடி கவுரப்படுத்தினார். அப்போது அவர்களின் வாழ்க்கை முறை, குட்டி யானை வளர்ப்பு உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி கேட்டறிந்ததாகவும், அவர்களின் சேவைக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் பிரதமர் மோடி முகாமில் உள்ள யானை பாகன்களை சந்தித்து பேசினார். அப்போது யானைகள் வளர்ப்பு, பராமரிப்பு பற்றிய விஷயங்களை கேட்டார். மேலும் யானைகளுக்கு பிரதமர் மோடி உணவாக கரும்பு வழங்கினார். அப்போது யானை துதிக்கையை தூக்கி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published.