ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி லீக் போட்டியில் 3-2 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது இந்தியா. சென்னை, 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான்,சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்தநிலையில், ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி லீக் போட்டியில் 3-2 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது இந்தியா. ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கியில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது இந்திய அணி.