டெல்லியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து பாதிக்கப்பட்ட நிலையில்,150 விமானங்களின் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக 40க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன, மேலும் கிட்டத்தட்ட 100 விமானங்கள் தாமதமாகின. மழை தொடர்பாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். விமானங்கள் மற்றும் போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் கடுமையான மழை மற்றும் இடியுடன் கூடிய ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு வழங்கப்பட்ட ரெட் அலர்ட் இன்று வரை நீடிக்கப்படுகின்றது. இந்த நிலைமைகள் சீராகும் வரை மக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
