இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு.

அரசியல் இந்தியா இலங்கை உலகம் சிறப்பு தமிழ்நாடு நீதி மன்றம் முதன்மை செய்தி

2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்படி தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு விலக்கு அளித்துள்ளது. இதன்படி, 2015 ஜனவரி 9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்படி தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.இலங்கை தமிழ் அகதிகள், செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகள், பயண ஆவணங்கள் அல்லது விசா இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தாமாக முன்வந்து இலங்கைக்குத் திரும்ப விரும்பும் இலங்கையின் தமிழ் அகதிகள், விசா கட்டணங்கள் மற்றும் தங்கியிருக்கும் காலத்தை விட அதிக காலம் இந்தியாவில் தங்கியிருந்தால் அதற்குரிய அபராதங்களையும் உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டதின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் ஒன்றிய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு விலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *