ரூ.1 கோடி மதிப்பீட்டில் மருது சகோதரர்களுக்கான சிலை நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

அரசியல் இந்தியா கலை / கலாச்சாரம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களுக்கான ரூ.1 கோடி மதிப்பீட்டில் உள்ள திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 22ம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில், மருது சகோதரர்களுக்கான திருவுருவச் சிலைகளுக்கு அடிக்கல் நாட்டி, சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையினை திறந்து வைக்கிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது, நாட்டின் நலனுக்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு தியாகங்களைச் செய்த மருது சகோதரர்களை போற்றும் வகையில், அவர்களின் சிலைகள், மணிமண்டபங்கள் மற்றும் அரங்கங்களை அமைத்து, வருங்கால இளைஞர்கள் அவற்றைப் புரிந்து, உணர்ந்து, பின்பற்றும் வகையில் 10க்கும் மேற்பட்ட நினைவரங்கங்களையும் 36 திருவுருவச் சிலைகளையும் திறக்கவுள்ளார். மேலும், பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கான நினைவுச் சின்னங்களும் அமைக்கப்படுகின்றன. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், இந்திய விடுதலைப் போரில் தங்களின் உயிரையும் சொத்துகளையும் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில், சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் புனரமைக்கப்படுகின்றன. இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில், சிவகங்கை மாவட்டத்தில் தோன்றிய மாமன்னர்கள் மருது சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார், வீராங்கனை குயிலி மற்றும் வாளுக்கு வேலி அம்பலம் ஆகியோரின் பங்கு முக்கியமானது. கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், மருது சகோதரர்களுக்கான சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் திருப்பத்தூரில் திறக்கப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவகங்கைச் சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை அமைத்து சிலை அமைத்துப் பெருமை சேர்த்திடவேண்டும் என்று பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்தக் கோரிக்கைகளை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மாமன்னர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவிடம் அருகில் ரூ.1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படவிருக்கும் புதிய திருவுருவச் சிலைகளுக்காக நாளை (22.1.2025) சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி திடலில் நடைபெறுகின்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *