தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் 29ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும்பட்சத்தில், அதற்கு ”பெங்கல்” என்று சவுதி அரேபியா பெயர் வைக்கும்படி பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேதாரண்யத்தில் இருந்து 550 கிமீ தெற்கு -தென்கிழக்கு திசையிலும் சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
காற்றின் வேகமும், திசையும் மாறும் போது, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பிரிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் சிதறிப்போவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது. பெரும்பாலும் சாதகமான சூழ்நிலை நிலவுவதால் இது புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இது கரையை கடப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. எனவே இதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு சென்ைன வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.சென்னை, செங்கை, காஞ்சி பள்ளிகளுக்கு விடுமுறை.