தமிழக கூட்டுறவு அங்காடிகளில் யுபிஐ பண பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம்; பேடிஎம், போன்பே, கூகுள்பே மூலம் எளிதாகிறது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

அனைத்து ரேஷன் கடைகளிலும் Google Pay மற்றும் Paytm மூலம் பரிவர்த்தனை செய்யலாம் என கூட்டுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போது அனைவரின் கைகளிலும் செல்போன் தவழ்கிறது. செல்போனின் கூகுள் பே, போன் பே போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகளும் வைத்திருக்கிறார்கள். டீ குடித்துவிட்டு ரூ.10 பணம் செலுத்த வேண்டும் என்றாலும் கூட கடைகளில் உள்ள QR code அட்டை மூலம் ஸ்கேன் செய்தே செலுத்துகின்றனர். குக்கிராமங்களில் கூட QR code அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி வந்துவிட்டது.
என்றாலும் கூட தமிழகத்திலுள்ள ரேசன் கடைகளில் சில்லறையாக பணம் கொடுத்துவிட்டு சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆகவே, பணம் செலுத்தும் முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் Google Pay, Phone pay மற்றும் Paytm மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
மே மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த UPI வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ரேஷன் கடைகளிலும் UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *