83 பயணியர்களுடன் இலங்கைக்கு பயணம் சென்ற ‘சிவகங்கை’ கப்பல்.

இந்திய வணிகம் இந்தியா இலங்கை உலகம் சிறப்பு சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு

நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையிடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க, நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணியர் கப்பல் சேவையை 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கினார். ‘சிரியாபாணி’ என்ற பெயரில் இந்திய கப்பல் கழகத்தால் வழங்கப்படும் இந்த கப்பல் சேவையை தொடங்கிய சில நாட்களில் பருவநிலை மாற்றத்தால் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கான கப்பல் போக்குவரத்துக்கான சேவையை தனியார் நிறுவனம் மேற்கொண்டது. இதில், 150 பயணிகளை ஏற்றக்கூடிய ‘சிவகங்கை’ என்ற சிறிய கப்பல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று தனது பயணத்தை தொடங்கியது. ஆனால், பருவ மாற்றத்தினால், நவம்பர் 19 வரை அந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது 83 பயணிகளுடன் “சிவகங்கை ” என்ற தனியார் கப்பல் நாகை நகரத்திலிருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றது.ஒரு வழி பயணத்திற்கு 4,250 ரூபாய் மற்றும் இரு வழி பயணத்திற்கு 8,500 ரூபாயாக டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணிக்கு 10 கிலோ வரை பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு, கூடுதல் எடைக்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *