முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து சாதனை படைத்துள்ளது ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சோலார் ஆர்பிட்டர் நெருப்புக் குழம்புகளை கொப்பளிக்கும் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது.குறிப்பிடத்தக்க வகையில், வடக்கு மற்றும் தெற்கு காந்தப்புலங்கள் இரண்டும் ஒன்றாக சிக்கலாக இருப்பதைக் கண்டறிந்தது. சூரியனின் 11 ஆண்டு செயல்பாட்டு சுழற்சியின் உச்சத்தில் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.இந்த புகைப்படங்கள் சூரிய புயலின்போது அதன் தன்மையை அறிய உதவும் என கூறப்படுகிறது.
