திருப்பதி திருமலை கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அமைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் விஜயவாடாவில் கூட்டணி கட்சியின் சார்பில் விழா நடந்தது. இதில் முதல்வர் சந்திரபாபு கலந்துகொண்டு பேசுகையில், `கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னப்பிரசாதங்கள் கூட தரமற்று பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.லட்டு பிரசாத நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்தையும் மாற்றி தரமானவையாக கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்’ என கூறினார். ஆந்திர முதல்வரின் இந்த குற்றச்சாட்டு அனைவரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி, லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் வெங்கட்ராமனா ரெட்டி ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
அதில் லட்டில் மாட்டுக்கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. லட்டில் மீன் எண்ணெய், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவற்றின் கொழுப்புகளும் இருந்தன. மேலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பாமாயில் கலந்து இருப்பதும் அதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *