காசாவிற்கு அனுப்பப்படும் உணவு பொருட்களை தீவிரவாதிகள் கொள்ளையடிக்கும் தீவிரவாதிகள் என, இஸ்ரேல், அமெரிக்கா மீது ஐ.நா குற்றச்சாட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . காசாவின் மீது 11 வாரங்களாக இஸ்ரேல் விதித்திருந்த போர் நிறுத்த அறிவிப்பை கடந்த மே மாத மத்தியில் நீக்கியது. இருப்பினும், உதவிப் பொருட்களை விநியோகிப்பதில் கடுமையான அரசியல் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சிறு குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து உருவாக்கிய காசா மனிதாபிமான அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் மனிதாபிமான உதவியை ராணுவமயமாக்கி, மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுபுறம், ஐ.நா. தலைமையிலான மனிதாபிமான உதவி விநியோகத்தை ஹமாஸ் அமைப்பு திருடுவதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் குற்றம்சாட்டுகின்றன. இதனை ஹமாஸ் மறுத்துள்ளது. காசாவின் மீதான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் நீக்கி மூன்று வாரங்கள் ஆகியும், மிகக் குறைந்த அளவிலான கோதுமை மாவை மட்டுமே காசாவிற்குள் கொண்டு செல்ல முடிந்திருப்பதாக ஐ.நா. வேதனை .
