யுனஸ்கோ பாரம்பரியச் சின்னங்களான தமிழகத்தின் திருத்தளங்கள்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கலை / கலாச்சாரம் கோயில்கள் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, புகழ்மிக்க, பாரம்பரியம் மிக்க கோயில்களை காக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியில் மற்றும் கலாச்சார அமைப்பு யுனஸ்கோ பாரம்பரியத் தளங்கள் என அறிவித்து அதனை பாதுகாத்து வருகிறது. அவ்வாறு பாதுகாக்கப்பட்ட பாரம்பரியத் தளங்களில் தபிழகத்தின் சிறப்பு வாய்ந்த நான்கு கோயில்கள் இடம்பிடித்துள்ளது மிகவும் பெருமைக்குறியது.
தமிழகத்தின் மாமல்லபுரம் கடல் சிற்பக் கோயில், தஞ்சை பெரியக் கோயில், கும்பகோணம் ஐராவதேஷ்வரர் கோயில் மற்றும் கங்கைக்கொண்ட சோழபுரம் கோயில் ஆகியவை இடம்பிடித்துள்ளன.
கலாச்சாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சின்னங்களை பாதுகாக்கப்பது என ஐக்கிய நாடுகள் சபை 1972ம் ஆண்டு இத்திட்டத்தினை ஏற்படுத்தியது. 1984ம் ஆண்டு பல்லவ மன்னர்களால் கட்டுப்பட்டு இன்றளவும் கம்பீரமாய் காட்சியளிக்கும் மாமல்லபுரம் கடல் சிற்பக் கோயில் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1987ம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியக் கோயில் பாரம்பரியச் சின்னமாக சேர்க்கப்பட்டது.
அதன்பின் கங்கையை வெற்றிக் கொண்டதன் நினைவாக ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைக்கொண்ட சோழபுரமும் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஷ்வரர் கோயிலும் பின்னர் பாரம்பரியச் சின்னமாக சேர்க்கப்பட்டது. இச்சின்னங்கள் அனைத்தும் யுனஸ்கோ நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். இத்தளங்களை பாதுகாப்பது, புணரமைப்பது போன்றவைகளுக்கு யுனஸ்கோ பங்களிக்கும். இத்தளங்களில் யுனஸ்கோ அனுமதி இல்லாமல் எந்த திருத்தங்களோ, மாற்றாங்களோ செய்யமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில்களின் நிர்வாகத்தை இந்தியத் தொல்லியல் துறை கவனித்துக் கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published.