பெருகும் யானைகளின் எண்ணிக்கை; கொல்ல முடிவெடுத்த ஜிம்பாப்வே அரசாங்கம்

ஆப்ரிக்க நாடுகள் உலகம் சுற்றுச் சூழல் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வனவிலங்குகள் வினோதங்கள்

ஜிம்பாப்வேயில் சமீப காலமாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்ந்து வருகின்றன. போட்ஸ்வானாவிற்குப் பின் உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது.
இந்த நிலையில் ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனிடையே 800 யானைகள் வசிக்கக்கூடிய இடத்தில 2,550 யானைகள் வசிப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 800 யானைகள் வசிக்கக்கூடிய இடத்தில 2,550 யானைகள் வசிப்பதால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் யானைகளில் இருந்து வெட்டப்படும் தந்தங்களை அரசு பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *