
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் நீரஜ் சோப்ரா. இதன் மூலம் இந்தியாவின் எக்காலத்திலும் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெயரை உருவாக்கினார். டோக்கியோ ஒலிம்பிக் தங்க பதக்க வெற்றியாளர் இந்த முறை 89.45 மீ தூரம் ஈட்டி ஏறிந்து சாதனை படைத்துள்ளர்.
சுதந்திரத்திற்குப் பிறகு ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை நீரஜ் சோப்ரா படைத்தார்.
ஆறு வீசுதல்களில் சிறந்தவை கணக்கிடப்படுகின்றன.இருப்பினும், மூன்று முயற்சிகளில் இரண்டு முறை தவறியதால், நீரஜ் சோப்ராவால் புள்ளிகள் எதையும் பதிவு செய்ய முடியவில்லை. கடைசி முயற்சியும் பஃவுல் ஆக முடிந்தது. இது அவருடைய நாளாக இல்லை, எனினும் நீரஜ் 89.45 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி வென்றார்.

பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்று ஒலிம்பிக் சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார்.
அர்ஷத் 91.79 மீ தூரம் எறிதலை பதிவு செய்தார், ஒலிம்பிக் வரலாற்றில் 90 மீட்டருக்கு மேல் இரண்டு வீசுதல்களைக் கொண்ட முதல் தடகள வீரர் என்ற பெருமையை பெறுகிறார். அர்ஷத்தின் பதக்கம் 1992க்குப் பிறகு பாகிஸ்தானின் முதல் தங்கப் பதக்கமாக உள்ளது.
வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா வீசிய 89.45 மீ, அவரது இரண்டாவது பெஸ்ட் மற்றும் சீசன் பெஸ்ட் ரெகார்ட் என்பது குறிப்பிடத் தக்கது. இன்று அவரிடமிருந்து ஒரு சிறந்த ஆட்டம் வெளிவந்தது.
ஆனால் அர்ஷத் நதீம் ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைத்துள்ளார். 92.97 மீட்டர் எறிந்து, ஒலிம்பிக் தங்கத்தின் மூலம் தனது நாட்டின் 32 ஆண்டுகால ஏக்கத்தை பாகிஸ்தான் நட்சத்திரம் முடிவுக்கு கொண்டு வந்தார்.
