உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷ்; பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சிங்கப்பூர் செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழக வீரர் குகேசுஷுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. இந்த போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் தமிழக வீரர் டி குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னுடன் மோதினார். இறுதியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். இதன் மூலம் இளம் வயதில் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். அதாவது 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். தமிழக வீரர் ஒருவர் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றதற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலக செஸ் சாம்பியின்ஷி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- குகேஷ் வெற்றி வரலாற்றுக்கு முன் மாதிரியான வெற்றியாகும். அவருக்கு என்னுடயை வாழ்த்துக்கள். இந்த வெற்றி குகேஷின் திறமை, கடின உழைப்பு, அயராத ஆற்றலுக்கு கிடைத்த வெற்றியாகும். குகேஷின் எதிர்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவரது வெற்றியானது மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காண தூண்டியிருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள குகேஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உன் திறமையால் தமிழகம் பெருமை கொள்கிறது. இந்த சாதனை நாட்டின் செஸ் பாரம்பரியத்தை தொடர்வதோடு, மேலும் பல உலகத்தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதனால் உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *