ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையை பெறுகிறார் பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வன்

அரபு நாடுகள் இந்தியா உயர்கல்வி உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் தமிழ் நல்லாசிரியர் தமிழ்க்கல்வி தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

அமீரகத்தில் பேராசிரியர் பிரிவின் கீழ் அமீரக அரசின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வன் பெறுகிறார்.
அஜ்மான் அன்வர் பிசினஸ் மேன் சர்வீசஸ்-இன் தலைமை அலுவலகத்தில், துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வனுக்கு அன்வர் குழுமங்களின் வர்த்தக ஒருங்கிணைப்பாளர் அலி சயீத் அலி புத்தவில் அல் மத்ரூசி 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கி கவுரவித்ததார்.
இந்த நிகழ்ச்சியில் அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன், பி.எம்.குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கனகராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதன் மூலம் பேராசிரியர் பிரிவின் கீழ் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை டாக்டர் சித்திரை பொன்செல்வன் பெறுகிறார். பத்து வருட நிரந்தர கோல்டன் விசா என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள திறமையான நிபுணர்களுக்கு அந்தந்த துறைகளில் அவர்களின் பங்களிப்புக்காக அமீரக அரசால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *