தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு; கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கலை / கலாச்சாரம் கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடக்கும் நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு நடக்கவுள்ள நவராத்திரி கொலு விழாவினை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்க உள்ளார்.
நாள்தோறும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சி கொண்டாட்டங்களிலும் தனிநபர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *