ஒடிசா பூரி ஜெகநாதர் ரத யாத்திரை கோலாகல கொண்டாட்டம் .

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கலை / கலாச்சாரம் கோயில்கள் சிறப்பு செய்திகள் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள்

ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் கோவில் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் காணப்படுகிறது. ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் தயாரிக்கப்படுகிறது, அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் தயாரிக்கப்படுகிறது, அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். 16 சக்கரங்களை கொண்ட தேரில் ஜெகநாதரும், 14 சக்கரங்களை கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருள, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் செல்வார்கள். ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகிய மூன்று தேர்கலும் கோவிலிருந்து புறப்படும். பின் 2 கி.மீ. தொலைவில் உள்ள மவுசிமா கோவிலுக்கு செல்லும் பின் அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோவிலை சென்றடைந்ததும் ஓய்வெடுப்பர். திருவிழாவின் 4 வது நாளில் ஜெகநாதரை காண லட்சுமி தேவி, குந்திச்சா கோவிலுக்கு வருகை தருவார். அதை தொடர்ந்து மீண்டும் மூன்று தேர்கள் புறப்பட்டு பின்னர் ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் விழா நிறைவு பெறும். இந்த விழா 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று (27.6.2025) தொடங்கியது. ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *