உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; இராணுவ வீரர்கள் உட்பட பலர் மாயம்

இந்தியா இயற்கை பேரிடர் இயற்க்கை கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை விபத்துகள்

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட அதி கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ளது கீர்கங்கா நதி. மிகவும் பிரபலமான நதியான இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வாடிக்கை. இந்தப் பகுதியின் அருகே தராலி எனும் கிராமம் அமைந்துள்ளது.
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் உள்ளூர்வாசிகள் வசித்துவருகின்றனர். மேலும், சுற்றுலாப்பயணிகளுக்காக பல ஓட்டல்களும் அமைந்துள்ளன.
இந்நிலையில், கீர் கங்கா பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு மிக கன மழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தராலி கிராமத்தில் இருந்த பல வீடுகளும், ஓட்டல்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எதிர்பாராத இந்தச் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. சில தகவல்கள் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக கூறுகின்றன. இருப்பினும் இவை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் அதிகனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *