காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும். அதேபோல், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. மேலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று இரவில் மழை அதிகரிக்கும். தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட் விடுக்கபப்ட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
