ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்; பக்தர்கள் புடைசூழ கோவிந்தா முழக்கங்களுடன் கோலாகலம்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா, கோபாலா என கோஷம் எழுப்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்புரம் விழா மிக முக்கியமான நிகழச்சியாகும். முதல் திருநாளான அன்று இரவு 16 சக்கர வாகனத்தில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் பவனி நடைபெற்றது. 5 ஆம் திருநாளான கடந்த 3 ஆம் தேதி 5 கருட சேவையும், 7ஆம் திருநாளான கடந்த 5 ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது.
இந்நிலையில் 9 ஆம் திருநாளன ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடைப்பெற்றது. திரு ஆடிப்பூர தேர்த் திருவிழாவை காண தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். அடிப்பூரம் எனபடுவது ஸ்ரீ ஆண்டாள் பிறந்த
நட்சத்திரமாகும். இந்நாளில் நடைபெறும் இந்த தேரோட்டத்தில் பங்கேற்று ஸ்ரீ
ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னாரை தரிசனம் செய்தால் வாழ்வில் எல்லா நலன்களும்
பெறலாம் என நம்பப்படுகிறது. மேலும் திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தேரை வடம் பிடித்து இழுத்தால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
மதுரை கள்ளழகர்
சூடிக்கழைத்த வஸ்திரத்தை உடுத்தி திருத்தேரில் எழுந்தருளச் செய்தனர். தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் “கோவிந்தா கோபாலா” என்ற கோஷத்துடன் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளின் வழியாக தேரை இழுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *