உலகின் பழமையான மொழி தமிழ். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படுகிறோம் என்று தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் தனது இல்லத்தில், தமிழ் புத்தாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா தான். அதற்கான வரலாற்று குறிப்புகள் இங்கு நிறைய உள்ளன. அதற்கு ஒரு தகுந்த எடுத்துக்காட்டு தமிழ்நாட்டிலுள்ள உத்திமேரூர் பகுதிதான். இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடு என்பதற்கான சான்றுகள் சுமார் 1100-1200ம் ஆண்டுகளில் முன்னோர்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இங்கு உள்ளன.
அந்த காலங்களில் நடந்த இந்த ஜனநாயகம் மிக்க அரசியலமைப்பு என்பது கிராம சபைகள் மூலம் தான் நடத்தப்பட்டது. சட்டமன்றம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும், உறுப்பினர்களின் தகுதி என்ன, உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது போன்றவற்றை இந்த கிராம சபை முறை தெளிவாக குறிப்பிடுகிறது என பிரதமர் மோடி கூறினார். மேலும் உலகின் பழமையான மொழி தமிழ். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம் என்று கூறினார்.