FIDE லைவ் ரேட்டிங்கில், 11.9 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2006ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் குகேஷ். 7 வயது முதலே செஸ் விளையாட தீவிர பயிற்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்தார். குகேஷ், முதன் முறையாக 2015 ஆம் ஆண்டு ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப்பின் 9 வயதுக்குப்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்டு வென்றார். 2018 ஆம் ஆண்டு உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் 12 வயதிற்குட்பட்ட பிரிவில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், FIDE லைவ் ரேட்டிங்கில், 11.9 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள குகேஷ், இந்திய தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நீண்ட காலமாக இந்திய தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியதோடு, உலகிலேயே பிடே ரேட்டிங் தரவரிசையில் டாப் 10 இடத்தில் உள்ள இளம் வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.